ADVERTISEMENT

மதுக்கடையை திறக்காதே... பெண்கள் ஒப்பாரி போராட்டம் 

05:06 PM Apr 27, 2018 | rajavel


ADVERTISEMENT

தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட ஒப்பாரி போராட்டம் நடைப்பெற்றது.

ADVERTISEMENT

புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் [NH 45 ஏ]வில் கிருமாம்பாக்கம் முள்ளோடை முதல் மதகடிபட்டு வரை இருந்த 18 மதுபானக்கடைகள் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டது. இதையடுத்து சாராயக்கடை மற்றும் ஒயின்ஸ் பார் உரிமையாளர்கள் மாற்று இடத்திற்கு சென்றனர். இதனால் கடந்த பல மாதங்களாக தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் குறைந்தது.


ஆனால் தற்போது நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கடை திறக்க தடை இல்லை என்ற உச்சநீதிமன்ற மறு உத்தரவின்படி புதுவை நகராட்சிகளில் மட்டும் கடைகள் திறக்கப்பட்டது. புதுச்சேரியில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் திறக்கப்படக்கூடாது என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. ஆனால் கொம்யூன் பஞ்சாயத்துகளை நகராட்சி சாலைகளாக மாற்றி மதுபானக்கடைகளை மீண்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.




இதனை எதிர்த்தும், மதுக்கடைகள் திறப்பதை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக்கட்சி சார்பில் மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் கலால்துறை அலுவலகம் முன்பாக ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. மதுவினால் இறந்தவர்கள் சடலத்தை போல இருவர் படுத்திருக்க ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஒப்பாரி வைத்து அழுதனர்.


அதேசமயம் நெடுஞ்சாலைகளில் சட்டத்துக்கு புறம்பாக 18 மதுபான கடைகளை திறப்பது சம்பந்தமாக உயர்நீதி மன்றத்தில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT