Advertisment

கடன் தவணையைக் கட்டச் சொல்லி நிதி நிறுவனங்கள் நெருக்கடி! மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் புகார்

kallakurichi

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், திருநாவலூர் பகுதியில் மத்திய மாநில அரசுகள் அனுமதி பெற்ற சிறிய பைனான்ஸ் நிறுவனங்கள் உள்ளது. இந்த மினி வங்கிகள் தங்களது அலுவலகங்களின் உள்ள அலுவலர்களை வைத்துக்கொண்டு திருக்கோவிலூர், திருநாவலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெரும்பட்டு, உடைய நந்தல் பெரும்பட்டு, ஒரத்தூர், சிறுநாகலூர், பாண்டூர், மதியனூர், பெரும்பாக்கம், சேந்தநாடு, மாரனோடை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமப் பெண்கள் நடத்தும் சுய உதவிக் குழுக்களுக்கு 25 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கடன் கொடுத்துள்ளது.

இந்தக் கடனை மாதாமாதம் அசலும் வட்டியும் சேர்த்து தவணை முறையில் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அந்தந்த பகுதிக்குச் சென்று மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் பணம் வசூலித்து வருவார்கள். இரண்டு மாதங்களாக கரோனா பரவல் காணமாக அரசு பிறப்பித்த ஊரடங்கால் வேலைவாய்ப்பு இழுந்து வருமானமின்றி மிகவும் சிரமமான நிலையில் மகளிர் உள்ளனர். அன்றாடம்சாப்பாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையை அறிந்த மத்திய மாநில அரசுகள் மாதாமாதம் அவர்கள் செலுத்தும் கடன் தவணைத் தொகைக்குமூன்று மாதவிலக்கு அளித்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் பின்பற்றாமல் வங்கிகள் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் சென்று மாதத் தவணைகளைத் தவறாமல் செலுத்த வேண்டும் என்று கோரி நேரிலும் செல்போன் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் என்றும் இப்படிப்பட்ட நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

உளுந்தூர்பேட்டையில் நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்கள், வங்கிகள் கடன் தவணையை கட்டச் சொல்லி நெருக்கடி கொடுப்பதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

bank kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe