Advertisment

மதுபிரியர்களின் அட்டகாசம்! அதிகாரிகளின் அலட்சியத்தால் பெண்கள் சாலை மறியல்!

protest

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னபரூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. அக்கடையை மூடக் கோரி அப்பகுதி பெண்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சார் ஆட்சியரிடமும் மனு அளித்தும் , பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசானது பொதுமக்களின் கோரிக்கை ஏற்காமல் மதுபானகடை திறந்து விற்பனை செய்து வருகின்றது.

Advertisment

இந்நிலையில் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு, இரு சக்கர வாகனத்தில் பள்ளி மாணவிகளை பயமுறுத்துதல், பெண்கள் செல்லும் போது ஆபாச வார்த்தைகள் பேசுதல், மதுபாட்டிகல்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை வயல்நிலங்களில் வீசுதல், பள்ளி மாணவர்களை குடிப்பழக்கத்திற்கு ஆளாக்குதல், திருட்டு சம்பவத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு ஒழுக்க கேடான செயல்களை செய்து வருவதாக கூறுகின்றனர்.

மது பிரியர்கள் அட்டகாசத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, வந்த அப்பகுதி பெண்கள் 50 -க்கும் மேற்பட்டோர் ஒன்றுசேர்ந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். திடிரென மதுபான கடையை மூடக் கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டதால் கலைந்து சென்றனர். மேலும் மதுபானகடை திறக்கப்பட்டால் அடுத்த கட்டமாக மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

protest TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe