
இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உள்ள நிலையில், அதை 21 ஆக உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்பப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு, மகப்பேறு இறப்பு விகிதங்களைக் குறைத்தல் மற்றும் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துதல் குறித்து ஆராய மத்திய அரசு அமைத்த குழுவும், பெண்களின் திருமண வயதை ஆண்களின் திருமண வயதிற்கு சமமாக உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்தது.
நேற்று முன்தினம் (15.12.2021) கூடிய மத்திய அமைச்சரவை, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த அனுமதியளித்துள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்த குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006, சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டம் 1955 போன்ற சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. ‘பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளது பெண்களின் முன்னேற்றத்திற்குப் பேருதவியாக இருக்கும். இந்தச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும்’ என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)