Advertisment

முக்கிய நகரங்களில் மகளிர் விடுதிகள் அமைக்கக் கோரிய மனு!- பதிலளிக்காவிட்டால் சமூக நலத்துறை செயலாளர் ஆஜராக உத்தரவு!

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மகளிர் விடுதிகள் அமைக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் சமூக நலத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருவதால், அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பு மண்டலங்கள் அமைக்க வேண்டும் எனவும், முக்கிய நகரங்களில் மகளிர் விடுதிகள் அமைக்க உத்தரவிடக் கோரியும், கனிமொழி மதி உள்ளிட்ட எட்டு பெண் வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Advertisment

women's hostel  chennai high court

இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி சாஹி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்ந்து ஒராண்டு காலமாகியும் அரசு தரப்பில் பதிலளிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மனுவுக்கு ஜனவரி 13- ஆம் தேதி பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சமூக நலத்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 13- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

chennai high court tn govt womens hospital
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe