Advertisment

தொல்லியல் துறை கொடுத்த ஒரு நாள் சர்ப்ரைஸ்

Women's Day Celebration; Notification issued by Department of Archaeology

இன்று (08.03.2024) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பல சுற்றுலாத் தலங்களில் இன்று இலவசஅனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

குறிப்பாக சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளை பார்வையிடப் பயணிகளுக்கு இன்று இலவச அனுமதி அளித்துள்ளது தொல்லியல் துறை. இதனால் மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களை பார்வையாளர்கள் இன்று கட்டணமின்றி கண்டு களிக்கலாம்.

Advertisment

அதேபோல் புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான சித்தன்னவாசலில் இன்று ஒருநாள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் மூவர் கோயில் சித்தன்னவாசலில் எந்தவித கட்டணமும் இன்றி இன்று சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mamallapuram Pudukottai womensday
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe