அதிமுக தலைமை அலுவலகத்தில் களைக்கட்டிய மகளிர் தினம்! (படங்கள்)

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், அதிமுக சார்பில் கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். கலந்துகொண்ட இந்த விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கோகுல இந்திரா, வளர்மதி, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். கேக் வெட்டினார்கள். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். அவர்களும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். மேலும், தொண்டர்களுக்கும் கேக் ஊட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

admk World Women's Day
இதையும் படியுங்கள்
Subscribe