Advertisment

மகளிர் தினத்தில் வளையல் அணிவிப்பு, பாரம்பரிய உணவு மீட்பு என அசத்தும் பெண்கள்!

சிதம்பரத்தை அடுத்த ஓமக்குளம் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க்கில் உலக மகளிர் தினத்தையொட்டி பெட்ரோல் பங்கிற்கு வரும் அனைத்து மகளிர்களையும் குங்குமம் வைத்து வரவேற்று இரு கைகளுக்கும் வளையல்கள் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு கைகளில் வளையல்கள் அணிந்து சென்றனர். மேலும் வீட்டில் உள்ள பெண்களுக்கும் எடுத்து சென்றனர். இதனையறிந்த அவ்வழியாக சென்ற அனைத்து மகளிரும் வந்து வளையல்கள் அனிந்து சென்றனர்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் குமராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்குழலிபாண்டியன், பங்க் உரிமையாளர் சண்முகசுந்தரம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். காலை 9 மணி முதல் மாலை வரை வரும் அனைத்து மகளிர்களுக்கும் வளையல் அனிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதால் மகளிர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Women's bracelet, traditional food recovery on Women's Day

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அதேபோல் சி.தண்டேஸ்ர நல்லூர் கிராமத்திலுள்ள பிரிலியண்ட் மழைலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் அம்மாக்களுக்கு மகளிர் தினத்தில் பாரம்பரிய உணவு வகைகளை மீட்கும் வகையில் உணவு திருவிழா போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்த சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜி. மாரியப்பன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக தனியார் உணவு விடுதியின் உணவு மேற்பார்வையாளர்கள் ராஜசேகரன், அரசு பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்கள் இளஞ்செழியன், சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு உணவு வகைகளை தேர்வு செய்தனர்.

இதில் மாணவர்களின் அம்மாக்கள் 42 பேர் இயற்கை முறையில்(organic) சமைத்த அரிசிபுட்டு,திரட்டுபால்,பனங்கிழங்கு லட்டு, தென்னைபாயாசம், குதிரைவாலி, கடலைபருப்பு புட்டு, கேழ்வரகு கொழுக்கட்டை, சிகப்பரிசி புட்டு,பச்சைபயிறு பாயம், தினை லட்டு, மூங்கில் அரிசி பாயசம் உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கை பாரம்பரிய உணவுகளை சமைத்திருந்தனர்.

Women's bracelet, traditional food recovery on Women's Day

இதில் மூன்று நிலைகளில் தேர்வு பெற்ற 5 பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு கொடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளியின் தாளாளர் கலா கூறுகையில்,மனித உடலில் உணவு முறை சரியாக இருந்தால் எந்த நோயும் வராது. தமிழ் கலாச்சாரத்தில் பல உணவு முறைகள் அழிந்து வருகிறது. அதனை மீட்கும் வகையில் மகளிர் தினத்தில் மாணவர்களின் அம்மாக்களுக்கு இயற்கையான பாரம்பரிய உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது என்றார்.

CHITHAMPARAM Cuddalore happy womens day
இதையும் படியுங்கள்
Subscribe