சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று(17.09.2021) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் டெல்லி பெண் காவல் அதிகாரி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொல்லப்பட்ட வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு போராட்டம் நடத்தினர்.