Advertisment

“போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் அச்சத்துடன் பணியாற்றும் பெண்கள்” - டிடிவி தினகரன்

Women working Transport Corporation office with fear says ttv dhinakaran

போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் தொந்தரவு இருப்பதாக பெண்கள் அளித்திருக்கும் புகாரை விரிவாக விசாரணை செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் அச்சத்துடன் பணியாற்றுவதாக பெண் ஊழியர்கள் புகார் – புகாரை விசாரிக்க வேண்டிய விசாரணைக் குழுவே அப்புகாரை வெளியில் கசிய விட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

Advertisment

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சக உயர் அதிகாரிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. போக்குவரத்துக் கழகத்தில் தனக்கு தொந்தரவு இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை விசாரிக்காமல் அவரை பணியிடமாற்றம் செய்திருப்பதோடு, அவருக்கான வருகைப்பதிவையும் பதிவு செய்யாமல் அலைக்கழித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அதே போல, பெண்கள் அளிக்கும் புகாரை ரகசியமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய விசாரணைக் குழுவே, அப்புகாரை பொதுவெளியில் வெளியிட்டிருப்பதாகவும், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மிகுந்த மன உளைச்சலுடன் பணியாற்றி வருவதாகவும் பெண் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளி, கல்லூரிகள் தொடங்கி அரசு அலுவலகங்கள் வரை பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழல் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலேயே பெண் ஒருவர் பாதிக்கப்படும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.

எனவே, போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் தொந்தரவு இருப்பதாக பெண்கள் அளித்திருக்கும் புகாரை விரிவாக விசாரணை செய்வதோடு, புகாரின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும் பட்சத்தில் அச்செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

TTV Dhinakaran TNGovernment public transport tnstc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe