/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/16_122.jpg)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-படை திருக்கோயிலாகும். இந்தத்திருக்கோயிலுக்குபக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக பணம், நகை ஆகியவற்றை செலுத்தியுள்ளனர். இதனை எண்ணுவதற்கு திருக்கோயிலில் பொறுப்பு அதிகாரி இணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில் 150க்கும்மேற்பட்ட திருக்கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள், திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள், ஆகியோர்கள் மலைக்கோவில் வசந்த மண்டபத்தில் எண்ணும்பணியில் ஈடுபட்டனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய இந்தப் பணியில் காலை 9.30 மணிக்கு இரண்டு பெண் பணியாளர்கள் திருக்கோயில் உண்டியல் பணம் எண்ணும்பொழுது அந்தப் பணத்தை எடுத்து மறைப்பது போல் சி.சி.டி.வி கட்சியில் பதிவாகியுள்ளது. இதனைத்திருக்கோயில் அதிகாரிகள் கவனித்து அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் திருடியதை உறுதி செய்துள்ளனர். உடனடியாக திருத்தணி காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த திருத்தணி போலீசார்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருத்தணி முருகன் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் வைஜெயந்தியிடமும், திருக்கோயிலில் நாதஸ்வரம் வாசிக்கும் நிரந்தர பணியாளர் தேன்மொழியிடமும் விசாரணை நடத்தினர்.
இருவரும் உண்டியல் பணம் எண்ணும்ம் பொழுது திருடிய பணத்தை வைஜெயந்தியுடன் சேர்ந்து மலைக்கோவில் கழிவறைக்கு சென்று தங்களது உள்ளாடையில் மறைத்து வைத்துள்ளதை உறுதி செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இந்த இரண்டு பெண் பணியாளர்களிடமிருந்தும் ரூபாய் 1,15790 லட்சம் பணம் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் திருத்தணி முருகன் கோயில் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் எத்தனை நாள் இது போல் உண்டியல் பணம் என்னும் போது திருடி உள்ளனர் என்றும் திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)