Skip to main content

'தேர்தல் வருதுன்னு ஓடிவர்றீங்களா?' - அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பெண்கள்!

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

Women who questioned the Minister!

 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதிகளின் பல இடங்களில் மினி கிளினிக் திறந்து வைக்கவும், அரசின் நலத்திட்டங்கள் வழங்கவும் அமைச்சர் கே.சி.வீரமணி டிசம்பர் 18-ஆம் தேதி இராணிப்பேட்டை வந்துள்ளார்.

 

இராணிப்பேட்டை அடுத்த மோசூர் கிராமத்தின் வழியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கார்கள் செல்லும்போது, மோசூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என சுமார் 100 பேர் அமைச்சரின் காரை வழிமறித்து மடக்கியுள்ளனர். வேலூர் மாவட்டமாக இருக்கும்போதும், இப்போது இராணிப்பேட்டை மாவட்டமாக இருக்கும் நிலையிலும் எங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரவில்லை.

 

தண்ணீர் சரியாக வரவில்லை, தெருவிளக்குள் எரியவில்லை, கால்வாய் தூர்வாரவில்லை. இதுபற்றி நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது தேர்தல் வருகிறது என்றதும் இங்கு வந்து வாக்குறுதி தருகிறீர்களே, இதற்கு முன்பு ஏன் வரவில்லை எனக் கேள்வி எழுப்பினர். விரைவில் செய்து தருகிறேன் என அமைச்சர் சொல்லியும் பெண்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்பு அதிகாரிகள் மிரட்டி பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து அமைச்சரும், அதிகாரிகளும் சென்றனர்.

 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு முன்பே அந்தப் பகுதிக்கு, பயண வழியில் உள்ள கிராமங்களுக்குச் சென்ற போலீஸார், மக்கள் என்ன மனநிலையில் உள்ளார்கள் என விசாரித்து அதன்பின் அமைச்சருக்குத் தகவல் சொல்லி அவரை வரவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.