/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_132.jpg)
பொதுவாக மயானத்திற்கு பெண்கள் வரக்கூடாது. நெருக்கமான உறவுகளே உயிரிழந்தால் கூட பெண்கள் மயானத்திற்கு வந்து அடக்கம் செய்யகூடாது. ஆண்கள் மட்டுமே மயானத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் உடலை அடக்க செய்யவேண்டும் என்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
அவ்வப்போது தமிழ்நாட்டில் இந்த வழக்கத்தை மாற்றி பெண்களும் மயானத்திற்கு வரலாம் என்று அங்காங்கே சில இடங்களில் பெண்களே தங்களது உறவினர்கள்உடலை மயானம் வரை சுமந்துச் சென்று அடக்கம் செய்து பலரிடம் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் இதே போன்ற ஒரு சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்திராணி என்ற 83 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இந்திராணி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த மூதாட்டி இந்திராணியின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.அப்போது அங்கு வந்த திராவிட கழக பெண்கள் இந்திராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இந்திராணியின் உடலை திராவிடக் கழக பெண்கள் மயானம் வரை தோலில் சுமந்துச் சென்றனர். அதன் பின்பு அவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)