Advertisment

கயத்தாறில் பழச்சாறு அருந்திய மகள் மரணம்; தாய் கவலைக்கிடம்

fruit mixer

கயத்தாறு பகுதியில் பழச்சாறு அருந்திய மாணவி உயிரிழந்த நிலையில் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி சாந்தி, மகள் லட்சுமி பிரியா. கயத்தாறு பகுதியில் உள்ள பழக்கடையில் பழச்சாறு வாங்கியுள்ளனர். வீட்டிற்கு சென்று வாங்கி வந்த பழச்சாற்றை அருந்திய சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரையும் கயத்தாரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

Advertisment

இரண்டு நாள் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மாணவி லட்சுமி பிரியா மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னைக்கு கொண்டு செல்லும் போதே மாணவி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் கயத்தாறு காவல் நிலையத்தை முற்றுகை செய்தனர். அவர்களுக்கு பதில் அளித்த போலீசார் 'மாணவி மரணம் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் உறுதி அளித்தனர். இதனை அடுத்து உறவினர்கள் அங்கு இருந்து களைந்து சென்றனர். மாணவியின் தாயாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

fruits hospital
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe