சபரிமலையில் இன்று அதிகாலை இரண்டு பெண்கள் போலீசாரின் பாதுகாப்புடன் தரிசனம் செய்துள்ளனர்.

Advertisment

kk

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க கனகதுர்கா எனும் பெண்ணும், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பிந்து எனும் பெண்ணும் இன்று அதிகாலை 3.45 மணிக்கு சபரிமலை செல்ல பம்பை வந்தனர். இவர்களை போலீசார் மஃப்டியில் கூட்டி சென்றுள்ளனர். இவர்கள் இருவரையும் 18 படிகள் வழியாக அழைத்து செல்லாமல், வி.ஐ.பி.கள் செல்லும் பின் வாசல் வழியாக 1 மணி நேரத்தில் அழைத்து சென்று தரிசனம் செய்யவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம்24-ம் தேதி தரிசனம் செய்ய முற்பட்டபோது பக்தர்களால் போராட்டம் நடத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால், அவர்கள் ஊருக்கு திரும்பாமல் கேரளாவிலே இருந்துவிட்டு இன்று அதிகாலை மீண்டும் போலீசார் பாதுகாப்புடன் தரிசனம் செய்துள்ளனர்.