Women struggle against private financial institutions

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தனியார் வங்கிகளின் சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன்களை வழங்கி உள்ள தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடனை கட்ட சொல்லி அதிக அழுத்தம் தருவதாகவும் கால நேரமின்றி தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து கடனை அடைக்கச் சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், கடனை அடைக்க கால அவகாசம் தறாமல் நிதி நிறுவன ஊழியர்கள் மறுத்து அடாவடி செயலில் ஈடுபடுவதாகவும் ஆபாசமாக பேசுவதாகக் கூறி குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisment

இதனால் குடியாத்தம்- பமனேரி- சித்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் மற்றும் கோட்டாச்சியர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்பு அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சாலை மறியல் கைவிடப்பட்டது இதனால் சித்தூர் கேட் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisment