Women struggle against the opening of a new Tasmac store

Advertisment

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே உள்ள சுண்ணாம்புப்பேட்டை பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே குடியிருப்புகள் நிறைந்த அந்த பகுதியில் டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் புதிய டாஸ்மார்க் கடையின் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Women struggle against the opening of a new Tasmac store

அப்பொழுது புதிதாக இந்தப் பகுதியில் டாஸ்மார்க் கடை திறக்கக் கூடாது எனவும் கோஷங்களை எழுப்பினர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுண்ணாம்பு பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.