Women struggle against new Tasmac store near Gudiyatham

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் ஆளத்தூர் சாலையில் வைரம் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு நடந்துள்ளது. இதற்காகமினி லோடு ஆட்டோவில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு கடையில் இறக்குவதற்காக டாஸ்மாக் கடை ஊழியர்கள் வந்துள்ளனர். அப்பொழுது அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் ஏற்கெனவே இந்தப் பகுதியில் மதுபான கடை செயல்பட்டு வருவதாகவும் இதனால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாகவும், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியாத்தம் மேல் ஆளத்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், சரக்கு பாட்டில்களைஇறக்க வந்த லோடு ஆட்டோவையும்பொதுமக்கள்திருப்பி அனுப்பினர். இதன் காரணமாகவைரம் நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.