Advertisment

பாலியல் தொந்தரவு என பெண் புகார்: கடை உரிமையாளருக்கு அடி! 

women staff incident police in salem district

Advertisment

பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி கடையின் உரிமையாளர்கள் மீது பெண்ணின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடையின் உரிமையாளர், அங்கு பணியாற்றும் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் கடைக்குள் புகுந்து கடையின் உரிமையாளரைச் சரமாரியாகத் தாக்கினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாதிக்கப்பட்ட பெண், "இந்த கடையில் பாலியல் தொல்லைக் கொடுக்கிறார்கள். வேறு எந்த பெண்ணுக்கும் இதுபோன்று நடக்கக் கூடாது. இந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும்" என்றார்.

Advertisment

பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக பெண் கூறிய புகாருக்கு கடையின் மேலாளராக உள்ள மற்றொரு பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். கடையின் மேலாளராகப் பணியாற்றி வரும் பெண்ணிற்கும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும், இதில் கடையின் உரிமையாளர் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற காவல்துறையினர், தாக்குதல் தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident Women police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe