கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை அருகில் உள்ள வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் மணிகண்டன். இவர் கரூரில் உள்ள ஜெயராம் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு சென்ற அவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.

Advertisment

இந்த நிலையில் தாந்தோன்றிமலை அருகில் உள்ள அசோக்நகர் காட்டுப் பகுதியில் மணிகண்டன் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து பொதுமக்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Advertisment

women related issues college student incident police investigation

இந்த சம்பவம் குறித்து தாந்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசோக் நகர் காட்டுப்பகுதியில் மணிகண்டன் உடல் கிடந்த இடத்தின் அருகில் மதுபாட்டில்கள் சிதறிக்கிடந்தது. இதனால் நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதி போலீசார் விசாரணை துவங்கினர்.

விசாரணையில் கல்லூரியில் பெண் விவகாரம் சம்மந்தமாக நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் மணிகண்டனை அவரது நண்பர்கள் சரமாரியாக அடித்தனர். இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டனை காப்பாற்றுவதற்கு அடித்த நண்பர்களே ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அதற்குள்ளாக மணிகண்டன் இறந்து விட வேறு வழியில்லாமல் மணிகண்டனின் வீடு அருகே மணிகண்டன் உடலை போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

Advertisment

இது குறித்து போலீஸ் விசாரணையில் மணிகண்டனை அவருடைய நண்பர்கள் 7 பேர் சேர்ந்து தாக்கியது தெரிய வந்துள்ளது. இதில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.