Advertisment

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் பெண் கைதி தற்கொலை!- மருத்துவக்கல்வி இயக்குநருக்கு உத்தரவு!

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

WOMEN PRISONER incident tamilnadu human rights commission order

வேலூர் சிறையில் சிறை கைதியாக இருந்தவர் ராஜம்மாள், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், இவர் கடந்த மார்ச் மாதம் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 21- ஆம் தேதி, மனநலக் காப்பகத்தில் ராஜம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியின் அடிப்படையில், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், மனநலக் காப்பகத்தில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை.செய்து கொண்டது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் 5 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Advertisment

chennai human rights commission kilpakkam incident Prison Women vellore central jail
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe