Advertisment

எங்க ஊருக்கு டாஸ்மாக் வேண்டாம், மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் மனு...

Women petition to the District Collector not to open tasmac

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் உள்ள ராஜபாளையம் என்ற கிராமத்தில்அரசு மதுபான கடை அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில்,தங்களுடைய கிராமத்தில்டாஸ்மாக்கடைகண்டிப்பாகஅமைக்கக்கூடாது என்று வலியுறுத்திஅக்கிராமத்தைச்சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Advertisment

டாஸ்மாக்கடைகள் ஊருக்குப் புறம்பே இருக்கக்கூடிய பகுதியில் அமைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருக்கையில், ஊருக்குள் அதுவும் மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில்டாஸ்மாக்கடையைகொண்டுவருவது முறை அல்ல என்பதை வலியுறுத்தி, இந்த மனுஅளிக்கப்படுவதாக அப்பெண்கள் தெரிவித்தனர். மேலும் அதையும் மீறிடாஸ்மாக்கடை அமைக்கப்படும் பட்சத்தில் நாங்கள் ஒன்று திரண்டு அந்தடாஸ்மாக்கடையை அகற்றுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisment

trichy District Collector
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe