Advertisment

ஆண் நண்பருடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; போலீஸ் விசாரணை

women incident in sriperumbudur police investigation 

இரு வாலிபர்கள் தன்னைபாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவலன்செயலி வாயிலாக இளம் பெண் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisment

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், காஞ்சிபுரம்மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொழில் பூங்காவில் உள்ள தனியார் தொழிற்சாலைஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர், இரு நாட்களுக்கு முன்பு தனது ஆண்நண்பருடன் உணவு சாப்பிட்டுவிட்டுதனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து வந்த இரு வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, வடமங்கலம் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரில்தெரிவித்து உள்ளார்.

Advertisment

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதுடன், அப்பகுதியில்உள்ள சிசிடிவி கேமராகாட்சிகளைக் கொண்டு இரு வாலிபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக அப்பெண்ணின் ஆண் நண்பர் மற்றும் சந்தேகத்தின் பேரில் இரு வாலிபர்களிடமும்போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மிகப்பெரிய தொழிற்சாலைகள் உள்ள பகுதி, பாதுகாப்பு நிறைந்த பகுதி,உள்ளூர் தொழிலாளர்கள்மற்றும் வெளியூர் தொழிலாளர்கள் எனஎப்போதும்ஆட்கள் நடமாட்டம் மிகுந்துகாணப்படும் பகுதி, கண்காணிப்புகேமரா வசதிகளுடன் காணப்படும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழில் பூங்காவில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதியில் பணியாற்றும் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பர பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

police sriperumputhur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe