/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/court3_630_630 (3)_0_7.jpg)
சென்னை தியாகராயர் நகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, மூன்று சவரன் நகைகளைப் பறித்துச் சென்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017- ஆம் ஆண்டு கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர், தியாகராயர் நகரில் இளம்பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவரிடம் இருந்து மூன்று சவரன் நகையைப் பறித்துச் சென்றுள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக், குற்றவாளி அறிவழகனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 15 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)