women incident police arrested madurai district

Advertisment

இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் முதல்நிலை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் சினிமாவுக்குச் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பிய இளம்பெண் மற்றும் அவரது நண்பரான தனியார் நிறுவனத்தின் உரிமையாளரிடமிருந்து பணம், தொலைபேசி ஆகியவற்றைப் பறித்ததாகக் குற்றப்பிரிவு முதல்நிலை காவலர் முருகன் மீது புகார் எழுந்தது. மேலும், இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்நிலை காவலர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, விசாரணை நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, முதல்நிலை காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.