women incident krishnagiri police investigation

பர்கூர் அருகே, ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொடுவாளால் வெட்டிக் கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள கனகமுட்டுலு தண்ணீர்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. கூலித்தொழிலாளி. இவருடைய 40 வயது மனைவிகடந்த 15 ஆண்டுகளாக இவர் ஆடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

Advertisment

கணவர் கூலி வேலைக்குச் சென்ற பிறகு பெண், ஆடுகளை, அருகில் உள்ள காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில், புதன்கிழமை (ஜூன் 8) காலை அந்தபெண், ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அப்போது, தண்ணீர் பள்ளத்தைச் சேர்ந்த துரை (வயது 50) என்பவரும் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வந்தார்.

ஜி.டி. மலைப்பகுதியில் இருவரும் ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர், அவர்களிடம் தான் கிழங்குகளை எடுத்துச் செல்வதற்காக வந்ததாகக் கூறியுள்ளார். அவர்களுடன் அந்த இளைஞர் நீண்ட நேரமாக சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார். மதிய உணவு இடைவேளையின்போது பெண், துரை ஆகியோர் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை அந்த இளைஞருக்கும் சாப்பிடக் கொடுத்தனர்.

மாலை நேரம் ஆனதால் அவர்கள் ஆடுகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். துரையின் ஆடுகள் நீண்ட தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்ததால், அவற்றை ஓட்டி வருவதற்காக சென்று விட்டார். அப்போது, தனியாக இருந்த பெண்ணிடம், அந்த மர்ம இளைஞர் திடீரென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.

அதிர்ச்சி அடைந்த பெண், தன்னை காப்பாற்றுமாறு கூச்சல் போட்டுள்ளார். இதனால் பயந்து போன அந்த இளைஞர், தான் வைத்திருந்த கொடுவாளால் பெண்ணைதலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அலறல் சத்தம் கேட்டு துரை ஓடி வந்து பார்த்தபோது, அங்கு லட்சுமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.

நடந்த சம்பவம் குறித்து துரை ஊருக்குள் சென்று தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றிய அவர்கள், கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில், பர்கூர் அருகே உள்ள நக்கல்பட்டியைச் சேர்ந்த புல்லட் என்கிற சிம்மராஜ் (வயது 35) என்ற இளைஞர்தான் பெண்ணைபாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்தது.

கூலித்தொழிலாளியான சிம்மராஜ், சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். பெண், தினமும் ஆடு மேய்க்க வருவதை அறிந்த சிம்மராஜ், அவரை பாலியல் வன்கொடும்செய்ய முன்பே திட்டமிட்டிருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர்.

தலைமறைவாக உள்ள அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம், பர்கூர் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.