women incident case cbcid police srivilliputhur court

விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேரை ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisment

வழக்கில் தொடர்புடைய எட்டு பேரில் நான்கு பேர் சிறுவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்திலும், ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர். சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்து வரும் இந்த வழக்கில் சிறையில் இருக்கும் நான்கு பேர் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்துக்கு பலத்தப் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

Advertisment

காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரக்கோரி சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், ஆறு நாட்கள் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விசாரணைக்கு பிறகு வரும் திங்கள்கிழமை அவர்களை ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் பயன்படுத்திய செல்போன்களும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

Advertisment