Advertisment

சுவரில் ரத்தக்கறை... தலையில் காயம்... தூக்கில் சடலமாக பெண் பொறியாளர்! கொலையா? போலீசார் விசாரணை!!

women engineer incident in salem district police investigation

சேலத்தில், திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், இளம்பெண் ஒருவர் தூக்கில் சடலமாகத் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவரில் படிந்துள்ள ரத்தக்கறை, சடலத்தின் தலையின் உள்ள காயம் ஆகியவை இந்த சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.

Advertisment

சேலம் சூரமங்கலம் ரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் கீர்த்திராஜ். கோவையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தனஸ்ரீயா (வயது 26). பொறியியல் பட்டதாரி. இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூன் 11- ஆம் தேதி இரவு திடீரென்று வீட்டில் தனஸ்ரீயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கீர்த்திராஜின் தந்தை, மனைவியின் பெற்றோருக்கு தகவல் அளித்தார்.

சூரமங்கலம் முல்லை நகரில் வசித்து வரும் தனஸ்ரீயாவின் தந்தை தியாகலிங்கம், தாயார் ராஜலட்சுமி ஆகியோர் மகள் இறந்துவிட்டதாக கிடைத்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். கீர்த்திராஜ்தான் தனஸ்ரீயாவை அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடுவதாகக் கூறினர்.இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்தனர். தனஸ்ரீயாவின் தலையின் பின் பக்கத்தில் காயம் இருப்பதும், வீட்டு சுவரில் பல இடங்களில் ரத்தக்கறை உள்ளதும் தெரிய வந்துள்ளது.

Advertisment

கடந்த பத்து நாள்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தனஸ்ரீயா கோபித்துக்கொண்டு, தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். அவரை கீர்த்திராஜ் சமாதானம் செய்து, ஜூன் 11- ஆம் தேதிதான் வீட்டுக்கு அழைத்து வந்தார்.அன்று இரவுதான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. எனினும், உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகே இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா? என்பது தெரிய வரும் என்கிறது காவல்துறை. சடலம், கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

காவல்துறையினர் கீர்த்திராஜ், அவருடைய தந்தை பெரியசாமி, தாயார் ரஞ்சனி ஆகியோரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகி மூன்று ஆண்டுக்குள் தனஸ்ரீயாவின் மரணம் நடந்துள்ளதால் இதுகுறித்து சேலம் கோட்டாட்சியரும் நேரடி விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் ரெட்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

incident Women Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe