வடமாநில பெண் தொழிலாளியைத் தாக்கிய இரண்டு பேர் கைது!

women employee incident in coimbatore district

கோவையில் மேலாளர் ஒருவர் தனது நிறுவனத்தில்பணிபுரியும் பெண் தொழிலாளி ஒருவரை தாக்கியதில், அந்தப் பெண் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த சம்பவம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூல் ஆலை விடுதியில் நடைபெற்றது தெரியவந்தது.

அந்த விடுதியில் பணிபுரிந்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் பணிக்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விடுதியின் காப்பாளர் அந்தப் பெண்ணைத் தாக்கி உள்ளார் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, சரவணம்பட்டி காவல்துறையினர், அந்த விடுதியின் காப்பாளர் லதா, மேலாளர் முத்தையா ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Coimbatore incident police Women
இதையும் படியுங்கள்
Subscribe