Advertisment

‘நமக்குள் ஒன்றிணைவோம், நமக்காய் ஒன்றிணைவோம்’ - பெண் காவலர்கள் ரூ.11 லட்சம் நிதியுதவி

women constables have given rs 11 lakh to family of deceased constable

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2003 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து, கடந்த 21 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண் தலைமைகாவலராக பணியாற்றி வந்தார்.

Advertisment

கடந்த 17.04.2024 அன்று பணி முடித்து விட்டு, தனது கணவருடன், இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச்சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து பெண் தலைமை காவலர் பரிமளாவுடன் 2003 ஆண்டில் ஒன்றாக காவலர் பணியில் சேர்ந்த பெண் காவலர்கள் ஒன்றிணைந்து, நமக்குள் ஒன்றிணைவோம், நமக்காய் ஒன்றிணைவோம் என்ற நோக்கத்தில், பரிமளாவின் பெண் பிள்ளை மற்றும் ஆண் பிள்ளையின் பெயரில் 10 லட்சம், ரூபாய் மதிப்பிலான அஞ்சலக வைப்புத்தொகை பத்திரங்கள் மற்றும் அசல் ரசீதுகளையும், 1 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் பெண் தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினரிடம் அவருடன் பணியில் சேர்ந்த பெண் காவலர்கள் ஒன்றிணைந்துவழங்கினர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து பெண் காவலர் பரிமளாவின் திருவுருபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, அவருடன் பணியாற்றிய நிகழ்வுகளை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டனர்.

ambur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe