women complaint against two police man salem

சேலத்தில்இளம்பெண் ஒருவர் சிறைக் காவலர்கள் இருவர் தன்னை அலைப்பேசியில் ஆபாச காணொலி பதிவு செய்து மிரட்டி வருவதாகப் புகார்அளித்துள்ளார்.சேலத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவர்அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில்புகார் மனு ஒன்றைஅளித்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், ''சேலம் சிறைக் காவலர்கள் இரண்டு பேருடன் எனக்கு இன்ஸ்டாகிராம் சமூக ஊடகம் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டது. அதன்பேரில் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினேன். நாளடைவில் நாங்கள் நெருங்கிப் பழகினோம். அப்போது அவர்கள் எனக்குத்தெரியாமல் என்னை, அலைப்பேசி மூலம் ஆபாசமாக காணொலி காட்சி பதிவு செய்துள்ளனர். அந்த காணொலி காட்சிகளைக் காட்டி என்னை மிரட்டி வருகின்றனர். பாலியல் ரீதியாக என்னைத்தொந்தரவு செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று கூறியுள்ளார். இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment