ரேஷனுக்கு வரும் பெண்களிடம் அத்துமீறல்- எடையாளர் மீது தாக்குதல்

Women coming for rations harassed - Weigher attacked

தென்காசியில் நியாய விலைக்கடைக்கு வரும் பெண்களிடம் செல்போனை பறித்துக்கொண்டு கையை பிடித்து இழுத்ததாக கடை ஊழியர் மீது புகார் எழுந்த நிலையில் அந்த பகுதி மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாரதியார் தெருவில் 'அமுதம் நியாய விலைக் கடை' செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெண்களிடம் செல்போனை பறித்துக்கொண்டு கையைப் பிடித்து இழுத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக எடையாளர் பாலமுருகன் மீது புகார்கள் எழுந்தது. இதனையறிந்த பெண்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் நியாயவிலை கடைக்கு வந்து எடையாளர் பாலமுருகனிடம் கேள்வி எழுப்பியதோடு, அவரை கடுமையாக தாக்கினர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளிலாகி வைரலாகி வருகிறது.

attack ration shop thenkasi
இதையும் படியுங்கள்
Subscribe