/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/court3_630_630 (3)_2.jpg)
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பங்களாபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் மதன்குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கடந்த 2019- ஆம் ஆண்டு சிறுமியின் தாயார் பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் மதன்குமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்ற வந்தது. இவ்வழக்கு தொடர்பான, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி வெங்கடேசன் இன்று (21/10/2021) தீர்ப்பளித்தார். அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மதன்குமாருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, மதன்குமாரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)