women children incident pudukkottai mahila court judgement

புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு அந்த மாவட்டம் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி சிறுமியை திருமணம் செய்துக் கொள்வதாக, ஆசை வார்த்தைக் கூறிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, தாமரைச்செல்வன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவத்தில் தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தாமரைச்செல்வனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 32,000 அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் மணி என்பவரை விடுதலை செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூபாய் 3.8 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.