Published on 24/03/2022 | Edited on 24/03/2022

போக்ஸோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி மேஜராகிவிட்டால்,அவரை மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணையைச் செய்ய அனுமதிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரை நேரில் அழைத்து குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக் கோரி, குற்றஞ்சாட்டப்பட்ட கணேஷன் என்பவர், மனுத்தாக்கல் செய்த நிலையில், போக்ஸோ சட்டத்தின் படி வாய்ப்பில்லை என மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து கணேஷன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்பவம் நடந்த போது மைனராக இருந்த பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மேஜராகிவிட்டதால், அவரை விசாரிக்க அனுமதிக்கலாம் எனக் கூறியுள்ளது.