WOMEN CHILD INCIDENT SALEM POLICE INVESTIGTION

சேலத்தில், பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

Advertisment

சேலம் அன்னதானப்பட்டி கனரா வங்கி எதிரில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் திங்கள்கிழமை (அக். 10)காலை பச்சிளம் பெண் குழந்தை சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள்அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

காவல்துறையினர் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், சடலமாகக் கிடந்த பெண் குழந்தை 7 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பிறந்துள்ளதும், பிரசவத்தின்போதே அந்தக் குழந்தை இறந்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

Advertisment

இறந்த குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல் மர்ம நபர்கள் குப்பைத் தொட்டியில் வீசிச்சென்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

குப்பைத் தொட்டி உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் பச்சிளம்குழந்தையின் சடலத்தை குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர்விசாரித்து வருகின்றனர்.

குழந்தையின் சடலம் உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.