சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு கருதி அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் பெருத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 500 பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பயணம் செய்யும் பெண்களுக்கு பேருந்தில் ஏதாவது பிரச்சனை என்றால் கேமராவில் பதிவாகும். மேலும் அலாரம் பொத்தானை அழுத்தினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.