women

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் லாரி டிரைவர் செந்தில்நாதன்(40), இவரது மனைவி இளவரசி (29). திருமணம் முடிந்து 4 ஆண்டுகளான நிலையில் இவர்களுக்கு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்தின் போது, செந்தில்நாதனுக்கு 45 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சனையாக இளவரசியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு செந்தில்நாதன் தனது மனைவியுடன் சென்னை பூந்தமல்லி நண்பர்கள் நகரில் வசித்தார்.

Advertisment

செந்தில்நாதன் அடிக்கடி இளவரசியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 1ம்தேதி இளவரசி இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு செந்தில்நாதன் தகவல் தெரிவித்துள்ளார். இளவரசியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்னை வந்து சாவில் சந்தேகம் உள்ளதாக பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்யப்படும் நீங்கள் சடலத்தை அடக்கம் செய்யுங்கள் என கூறியுள்ளனர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதையடுத்து, செந்தில்நாதன் சடலத்தை ஊருக்கு எடுத்துச்செல்லுங்கள், நான், உறவினர்களுடன் வருகிறேன் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இளவரசியின் சடலத்தை எடுத்துக்கொண்டு அவரது உறவினர்கள் செந்தில்நாதன் ஊரான ஒல்லியாம்பாளையத்திற்கு கொண்டு சென்றனர்.

Advertisment

கடந்த 4 நாட்கள் ஆகியும் செந்தில்நாதன் மற்றும் அவரது உறவினர்கள் யாரும் ஊருக்கு வராததால் இளவரசியின் இறப்புக்கு செந்தில்நாதன் மற்றும் அவரது தாய், தங்கை உள்ளிட்டவர்கள் தான் காரணம். அவர்களை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்க மாட்டோம் என்று கூறி, வீட்டிலேயே சடலத்தை கடந்த 4 நாட்களாக பூட்டி வைத்துள்ளனர். இதில் சடலம் துர்நாற்றம் வீச துவங்கி உள்ளது. இதனால் உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இளவரசியின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.