கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பாலமலை வனப்பகுதி வழியாக குஞ்சூர் பகுதியில் இருந்து மாங்குழி செல்லும் சாலையில் வனத்துறையினரின் அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக 8 பேர் கொண்ட குழு வனப்பகுதியில் டிரெக்கிங் சென்றுள்ளனர்.

இந்நிலையில் காலை சுமார் ஏழு முப்பது மணி அளவில் ஒற்றை ஆண் காட்டு யானை எதிரில் வந்தபொழுது உடன் சென்ற மற்ற நபர்கள் தப்பி ஓடிவிட பெண் மட்டும் காட்டு யானையிடம் மாட்டிக் கொண்டார். இதில் காட்டு யானை அவரை தலையில் மித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

women Attacked by Wild Elephant In Coimbatore

Advertisment

Advertisment

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், சம்பவத்தில் உயிரிழந்த பெண் புவனேஸ்வரி என்றும் அவரதுகணவர் பெயர் பிரசாந்த் என்பதும், இவர் கோவை சங்கரா கண் மருத்துவமனையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் மற்றும் நண்பர்கள் அனைவரும் வனப்பகுதிக்குள் அவ்வப்போது எவ்வித அனுமதியும் பெறாமல் டிரெக்கிங் மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது தெரியவருகிறது.

அதேபோல் இன்று காலை பாலமலைக்கு டிரெக்கிங் வந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். வேட்டைத்தடுப்பு காவலர்கள் சரிவர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதில்லை எனவும் வனத்துறையினரின் அலட்சியமே அனுமதியில்லாமல் பாலமலையில் டிரெக்கிங் செல்ல காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.