
கோவையில் இன்று பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'நம்ம ஊரு பொங்கல்' என்ற தலைப்பில் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், கோவை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த பாஜகவினர் சார்பில் வெள்ளலூர் பைபாஸ் சாலை அருகே ஆனைமலை அம்மன் கோவில் அருகே ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டார்.
ரேக்ளா பந்தயத்தை துவக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ''பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. நானும் பாஜக கட்சியில்தான் இருக்கிறேன். எல்லா பெண்களும் பாஜகவை விட்டு வெளியே போகவில்லை''என்றார்.