/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3822.jpg)
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த திவ்யா காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கு தேர்வானதை அமைச்சர் ஐ.பி.யிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
தேனி தெற்கு மாவட்ட திமுகவை சேர்ந்த அவைத்தலைவர் மனோகரனின் மருமகள் திவ்யா குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கு தேர்வானதையொட்டி திண்டுக்கல்லில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அப்பொழுது அமைச்சர் ஐ.பி.பேசும் பேசுகையில், 'நான்கு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண்கள் அரசுப்பணிக்கு தேர்வு பெற்றுள்ளனர். திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் அரசுப் பணியில் சேர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். அதற்கு காரணம் கலைஞர் வழியில் வந்த மு.க.ஸ்டாலினின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தான்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)