Advertisment

மோடி ஆட்சியில் பெண்களும், தலித் மக்களும் அச்சத்துடன் வாழ்கின்றனர்: கனிமொழி பேச்சு

மத்தியில் ஆண்டு வரும் பாஜக அரசின் நடவடிக்கைகளால் பெண்கள், சிறுபான்மையினர் தலித் மக்கள் என அனைவரும் ஒரு வித பயத்துடன் வாழ்ந்து வருவதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையில் சென்னை எழும்பூரில் நடைபற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்.பி., கனிமொழி பேசும்போது,

Advertisment

இன்று நாடு முழுவதும் சிறுபான்மையின மக்கள் ஒரு அச்சத்திலையே வாழக்கூடிய ஒரு நிலையை மத்தியில் இருக்கும் மோடி அரசு உருவாக்கி வைத்துள்ளது. சிறுபான்மையின மக்கள் மட்டும் இல்லை, பெண்களாக இருக்கட்டும், தலித்துகளாக இருக்கட்டும் அத்தனை பேரும் அச்சுறுத்தப்படுகிறார்கள் என அவர் கூறினார்.

முன்னதாக பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியில் ராகுலும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலினும் வர வேண்டும் என அவர் கூறினார்.

kanimozhi modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe