Advertisment

“டார்ச்சர் தாங்க முடியல...” - சபாநாயகர் நிகழ்ச்சியில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

The woman who tried to set fire to the Speaker's program caused a stir

நெல்லையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் விவசாய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அந்த பகுதிக்கு வந்த பெண் ஒருவர் மண்ணெண்ணெய்யைமேலே ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

Advertisment

உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டனர். உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்டவிசாரணையில், வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த அப்பெண் யாரிடமோ கடன் வாங்கியதாகவும் கடன் தொடர்பாக கந்து வட்டி பிரச்சனையை அனுபவித்துவந்ததால் பொறுக்க முடியாத அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்த செயலில் ஈடுபட்டதாகத்தெரிவித்துள்ளார். அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

APPAVU nellai police speaker
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe