Advertisment

‘துணிக்கடையில் திருடிய பெண்’...- ஆதரவாக களமிறங்கிய நெட்டிசன்கள்! 

 'The woman who stole the skirt in the clothing store ...

திருப்பூரில் துணிக்கடையில் 2000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறைக்கேட்ட பெண் ஒருவர் பாவாடையை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தது.பொன்னுலிங்கம் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த கடைக்கு நேற்று காலை சிறுவன் ஒருவனுடன் வந்த பெண் ஒருவர் 250 ரூபாய்க்குத்துணி எடுத்துள்ளார். அதற்காக 2,000 ரூபாயைக் கல்லாவில் இருந்த பெண் ஊழியரிடம் கொடுத்துள்ளார். துணிகளைப் பெற்றுக்கொண்டு சில்லறையும் வாங்கியுள்ளார். பிறகு வெளியே சென்ற அந்த பெண் மீண்டும்அதே சிறுவனுடன் கடைக்கு வந்து துணி தனக்கு வேண்டாம் என கூறியுள்ளார்.

Advertisment

அப்பொழுது அந்தபெண்ணுடன்வந்த சிறுவன் கடை ஊழியர்களிடம் பேசும் பொழுது மேஜையில் இருந்த பாவாடையை எடுத்து புடவையில் மறைத்துக்கொண்டு வெளியே சென்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில்வெளியான நிலையில், அடிப்படைத் தேவைக்கு திருடுபவர்களுக்கும் தேவைக்கு அதிகமாக திருடுபவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது; இதற்கு எல்லாம் எதற்கு சிசிடிவி கேமரா இருக்கு ஆனால் கோடி கணக்கில் கொள்ளையடிக்கும்ஊழல் அரசியல்வாதிகளின்வீடியோவெளியே வராது என்பது போன்ற கருத்துக்களை அந்த பெண்ணுக்கு ஆதரவாகநெட்டிசன்கள்தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

CCTV footage thirupur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe