Advertisment

சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றிய பெண்... நேரில் அழைத்துப் பாராட்டிய ஐ.ஜி

The Woman who saved the lives of the boys!

தஞ்சை மாவட்டம், அலவந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் 13.01.2022 அன்று மாலை கபிஸ்தலம் காவேரி ஆற்றில் குளித்துகொண்டு இருந்தபோது ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கினர். அப்போது அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சரோஜா (60) என்பவர் தனது புடவையை அவிழ்த்து வீசி 13 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்களைக் காப்பாற்றினார்.

Advertisment

14 வயது மதிக்கத்தக்க மற்றொரு சிறுவனின் உடல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மறுநாள் (14.01.2022) காலை சுவாமிமலை அம்பி அய்யர் தோட்டத்திற்கு அருகில் உள்ள படுகையில் கண்டெடுக்கப்பட்டது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு நபர்களைத் துரிதமாக செயல்பட்டுகாப்பாற்றிய சரோஜாவை,திருச்சி மத்திய மண்டலகாவல்துறைத் தலைவர் வே.பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Advertisment

police Tanjore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe