Published on 04/05/2021 | Edited on 04/05/2021

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கற்பகநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன். இவர் தனது ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை அடித்துக் கொன்று தனது வீட்டு பாத்ரூமில் புதைத்து விட்டு, இன்று ஹரிகிருஷ்ணனும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது வீட்டிலுள்ள பாத்ரூமை தோண்டும் பணி நடைபெற உள்ளது. தோண்டிய பின்னர் இந்த ஒரு பெண்ணை மட்டும் தான் கொலை செய்துள்ளாரா அல்லது வேறு யாரையும் அடித்துக்கொலை செய்து புதைத்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடைபெற உள்ளது.