Advertisment

3 மாதங்களில் கசந்த காதல் திருமணம்; கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் பெண் சடலம் மீட்பு

A woman who married for love is found in a well - sensation in Peranambhat

Advertisment

வேலூரில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் மூன்றே மாதங்களில் துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்ட நிலையில், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர்ராஜேஸ்வரி. இவர் ரங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற இளைஞரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பெற்றோரின் எதிர்ப்பைமீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஸ்ரீதர் வீட்டில் கடந்த மூன்று மாதங்களாக ராஜேஸ்வரி வசித்துவந்த நிலையில் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த நாள் காலை ராஜேஸ்வரியை காணவில்லை. அதனைத் தொடர்ந்து சுற்றுவட்டாரப் பகுதியில் தேடிப் பார்த்ததில் போக்கலூர் என்ற இடத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் ராஜேஸ்வரியின் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம்மிதந்துள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

love incident PERANAMPATU Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe