Advertisment

மூதாட்டியை அறையில் பூட்டிவிட்டு கொள்ளையடித்த பெண்! 

The woman who locked the old woman in the room and robbed her!

Advertisment

மூதாட்டியிடம் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 35 பவுன் தங்க, வைர நகைகளை திருடிச் சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் கூட்டுறவு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி விஜயகுமாரி (79). இவரின் மகன் ஸ்ரீதர் சேலத்தில் நகைகடை வைத்துள்ளார். மகள் ராணி தனது தாயார் விஜயகுமாரியுடன் வசிக்கிறார்.

இந்நிலையில் நேற்று (9ம் தேதி) மாலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், வீடு வாடகைக்கு கேட்டு வந்துள்ளார். அந்தப் பெண் மூதாட்டி விஜயகுமாரியிடம் வீடு வாடகைக்கு கிடைக்குமா என்று பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அவரின் மகள் ராணி சமையல் அறைக்கு சென்றார். அப்போது மூதாட்டி விஜயகுமாரியின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. தனியறையில் இருந்த செல்போனை எடுத்து பேசிக்கொண்டிருந்த போது, வந்திருந்த மர்மப் பெண் அறையின் கதவை மூடி தாழ்ப்பாள் போட்டு விட்டார். சிறிது நேரத்திற்கு பின் சமையலறையிலிருந்து வந்த ராணி கதவைத் திறந்துவிட்டு உங்களிடம் பேசிக் கொண்டிருந்த அந்த பெண் எங்கே என்று கேட்டார்.

Advertisment

இருவரும் முன்னறைக்கு வந்து பார்த்தபோது அலமாரி திறந்து அங்கு வெல்வெட் பையில் வைத்திருந்த 3 செயின், 4 வளையல், 3 வைர மோதிரம், 1 ஜோடி வைரத்தோடு உள்ளிட்ட 35 பவுன் நகைகளை மர்ம பெண் திருடி சென்றது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடம் சென்ற துறையூர் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Theft trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe