A woman who hides the body of a stillborn child in a bag in ranipettai

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம்ஆற்காடு திருநாவுக்கரசு தெருவைச் சேர்ந்தவர் ஜோதி(31). இவரது கணவர் தமிழ்ச்செல்வன். ஜோதிக்கு 9 ஆண்டுகளுக்கு முன்புதிருமணம் ஆகி சேலத்தில் அவரது கணவருடன் வசித்து வந்தார்.இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. நான்காவதாக கர்ப்பிணியாக இருந்த ஜோதி, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஆற்காட்டில் உள்ளஅவரது அம்மா வீட்டிற்குவந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று விடியற்காலை அவருக்கு பிரசவ வலி வந்ததின் காரணமாக வீட்டிலேயே அவரது தாயார் பிரசவம் பார்த்துள்ளார். அப்பொழுது, தாயும் குழந்தையும் இறந்து விட்டது. வீட்டில் அவரது தாயார் குழந்தையை ஒரு கைப்பையில் போட்டு மறைத்துவிட்டுதனது மகளை அரசு மருத்துவமனையில் இறந்து விட்டதாக கூறி நாடகமாடி உள்ளார்.மருத்துவர் பரிசோதனை செய்து பார்க்கும் போது, இவர் பிரசவம் ஆகி இறந்ததாக தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, ஆற்காடு நகர காவல்துறையினர் ஜோதியின் வீட்டிற்கு சென்று கட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர்.

A woman who hides the body of a stillborn child in a bag in ranipettai

Advertisment

பின்னர் ஜோதி மற்றும் அவரது குழந்தை ஆகிய இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, ஜோதியின் தாயார் மீது வழக்கு பதிவு செய்து ஆற்காடு காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த குழந்தையை கட்டிப்பையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் ஆற்காட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.