woman who got married for love Dharmapuri has suddenly gone missing

Advertisment

தர்மபுரியில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்லூரி ஆசிரியரைக் காதலித்து மணந்த கல்லூரி மாணவிதிடீரென்று மாயமாகியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஹள்ளியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் வித்யா (21). காரிமங்கலத்தில்உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவருடன் நட்பாக பழகிவந்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கமான நட்புகாதலாக மலர்ந்தது.

அவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததை அடுத்துஅவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மூன்றுமாதத்திற்கு முன்பு காதலர்கள் இருவரும் இருவீட்டாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் கணவர் வீட்டில்வித்யா வசித்து வந்தார்.

Advertisment

இதற்கிடையே, எர்ரனஹள்ளியில் உள்ள தந்தையின் வீட்டிற்கு வித்யா வந்தார். இந்நிலையில் நவ.17-ம் தேதி அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்டுதற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய வித்யாவை நவ.20-ம் தேதி முதல் திடீரென்று காணவில்லை. இதுகுறித்து அவருடைய அண்ணன் மாதன் அளித்த புகாரின் பேரில் பாலக்கோடு காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.